டொனால்ட் ட்ரம்ப் உள்ளக நிர்வாகத்தில் முதல் சறுக்கல்: தேசிய பாதுகாப்பு ஆலோசகர் பதவி விலகல்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோல்ட்ஸ்(Michael Waltz) தனது பணியில் இருந்து விலகக் கட்டாயப்படுத்தப்படுகிறார் என்று சர்வதேச செய்தி ஒன்று கூறுகிறது.
இது, 2025 ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரது உள்ளக அரசியலில் ஏற்பட்ட முதல் பெரிய மாற்றமாகும்.
பதவி விலகல்
வோல்ட்ஸின் துணை அதிகாரியும், ட்ரம்பின் முதல் பதவிக்காலத்தில் வட கொரியாவை மையமாகக் கொண்ட வெளியுறவுத்துறை அதிகாரியுமான ஆசிய நிபுணருமான அலெக்ஸ் வோங்கும் தனது பதவியை விட்டு விலகுகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
புளோரிடாவைச் சேர்ந்த 51 வயதான முன்னாள் குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினரான வோல்ட்ஸ், கடந்த மார்ச் மாதத்தில் ட்ரம்ப் தேசிய பாதுகாப்பு உதவியாளர்களிடையே, ஊழல் ஒன்றில் சிக்கிய நிலையில், வெள்ளை மாளிகைக்குள் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
இந்த நிலையில் வோல்ட்ஸிடமிருந்து அந்த பதவியை யார் பொறுப்பேற்பார் என்பது உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை, ஆனால், ரஸ்யா- உக்ரைன் ராஜதந்திரத்திலும் மத்திய கிழக்கிலும் ஈடுபட்டுள்ள அமெரிக்க சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் இந்த பதவிக்கு நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஒரு சக்திவாய்ந்த பதவியாகும் எனினும், அந்த பதவிக்கு செனட் உறுதிப்படுத்தல் அவசியம் இல்லை.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

Post office -ன் இந்த 5 சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்தால் FD-யை விட அதிக வட்டியைப் பெறலாம் News Lankasri

பிறப்பிலேயே சக்திவாய்ந்த மற்றும் கவர்ச்சிகரமான ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

பாகிஸ்தானின் ஒற்றை முடிவு... இந்தியாவின் Air India நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடிகள் இழப்பு News Lankasri
