மத நம்பிக்கைகளை மதிக்குமாறு அமெரிக்கா, இலங்கையிடம் கோரிக்கை
மத நம்பிக்கையை மதிக்குமாறு அமெரிக்கா, இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. கொவிட் தொற்றுக்கு இலக்காகி மரணிப்பவர்களின் சடலங்களை அகற்றுவது தொடர்பில் இவ்வாறு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
சர்வதேச சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மத நம்பிக்கைகள் மற்றும் கலாச்சார மரபுகள் குறித்து அரசாங்கம் கரிசனை கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
தங்களுடைய மத நம்பிக்கைகளின் பிரகாரம் தங்களின் அன்புக்குரியவர்களுக்கு பிரியாவிடை கொடுப்பதற்கான வழிமுறை இருக்க வேண்டுமென அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆகிய விவகாரங்களுக்கான பிரிவு டுவிட் பதிவு ஒன்றின் மூலம் சுட்டிக்காட்டியுள்ளது.
கொவிட் தொற்றில் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாசாக்களை அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரையில் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





தயவுசெய்து இந்த சீரியலை முடித்துவிடுங்கள், கதறும் சன் டிவி சீரியல் ரசிகர்கள்... அப்படி என்ன தொடர் Cineulagam

10 திருமணம், 350 துணைவியர்..! மனைவிகளுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை: யார் இந்த இந்திய மன்னர்? News Lankasri

இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri
