அமெரிக்காவில் கர்ப்பிணியை கொலை செய்து வயிற்றை வெட்டி குழந்தையை கடத்திச் சென்ற பெண்-உலக செய்திகள்
கர்ப்பிணியான பெண்ணொருவரை கொலை செய்து, பிறக்காத குழந்தையை அவரின் வயிற்றை வெட்டி எடுத்த யுவதி ஒருவர் கொலைக் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
29 வயதான டெய்லர் ரெனி பார்க்கர் எனும் யுவதியே குற்றவாளியாக காணப்பட்டுள்ளார்.
2020 அக்டோபரில், டெக்ஸாஸ் மாநிலத்தின் நியூ பொஸ்டன் நகரிலுள்ள வீட்டில் வைத்து, றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்கொக் எனும் 21 வயது யுவதியை டெய்லர் பார்க்கர் கொலை செய்தாரென குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
டெய்லர் ரெனி பார்க்கர் சுமார் 10 மாத காலமாக தான் ஒரு கர்ப்பிணி போன்று நடித்து வந்துள்ளார்.
பின்னர் றீகன் மைக்கல் சிமோன்ஸ் ஹன்குக்கை தலையில் தாக்கியும் கத்தியால் பல தடவைகள் குத்தியும் கொலை செய்து, அவரின் வயிற்றை வெட்டி குழந்தையை கடத்திச் சென்றார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பின்னர் அப்பெண் குழந்தை உயிரிழந்துள்ளது.
சிமோன்ஸ் ஹன்குக்கின் 3 வயது மகளும் அவ்வேளையில் வீட்டில் இருந்ததாகவும் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டள்ளது. றீகனின் வயிற்றை வெட்டி, குழந்தையை டெய்லர் எடுத்தபோது, சிமோன்ஸ் ஹன்குக் உயிருடன் இருந்தார் என அரச தரப்பு சட்டத்தரணிகள் கூறியுள்ளார்கள்.
இவ்வழக்கில் டெய்லர் ரெனி பார்க் கர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட வேண்டும் என அரச தரப்பு சட்டத் தரணிகள் கோரியுள்ளனர்.
இது தொடர்பான பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான உலக செய்திகள்,