அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்க தயாராகுங்கள்: ஹவுதி கிளர்ச்சியாளர் கடும் எச்சரிக்கை
ஏமன் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் என்று ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அல்-எஸி எச்சரித்துள்ளார்.
அமெரிக்கா, பிரிட்டிஷ் கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் போர் விமானங்களால் நடத்தப்பட்ட மிகப்பெரும் ஆக்கிரமிப்புத் தாக்குதலுக்கு நம் நாடு உட்பட்டுள்ளது.
எனவே சந்தேகத்திற்கு இடமின்றி, அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கத் தயாராக வேண்டும் என துணை வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஹவுதி அமைப்பு தொடர் தாக்குதல்
இஸ்ரேல்-ஹமாஸ் போரில் ஹமாஸுக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி அமைப்பினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அதன் எதிரொலியாக செங்கடலில் பயணிக்கும் இஸ்ரேல் ஆதரவு நாடுகளில் இருந்து வரும் சரக்கு கப்பல்கள் மீது ஹவுதி அமைப்பு தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஏமனில் உள்ள ஹவுதிகள் மீது அமெரிக்காவும் பிரிட்டனும் இணைந்து இன்று தாக்குதல் நடத்தி வருகிறது.
போர் விமானங்கள்
ஏமன் நாட்டின் சதா, அல்ஹுதைதா, சத்தா, தாமர் ஆகிய நகரங்களில் ஹவுதிகளை குறி வைத்து போர் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்படுகிறது.
இந்நிலையிலேயே ஏமன் தாக்குதல்களுக்கு அமெரிக்காவும் பிரிட்டனும் அதிக விலை கொடுக்கும் என்று ஹவுதி அமைப்பின் துணை வெளியுறவு மந்திரி ஹுசைன் அல்-எஸி எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |