அமெரிக்காவின் தாக்குதலால் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கியஸ்தர்
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் ஆளில்லா விமானம் மூலம் அமெரிக்கா நடத்திய தாக்குதலால் ஹிஸ்புல்லா அமைப்பின் மூத்த தளபதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் மூன்று உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா அமைப்பை சேர்ந்த மூவரும் கிழக்கு பாக்தாத் மஷ்தல் என்ற இடத்தில் சொகுசு காரில் சென்று கொண்டிருந்தபோது, அமெரிக்கா இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக்குழு ஜோர்டான் நாட்டில் நடத்திய தாக்குதலில் மூன்று அமெரிக்க இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதோடு 40 பேர் காயம் அடைந்தனர்.
அதிரடி தாக்குதல்
இந்த தாக்குதலுக்கு ஈரான் ஆதரவு பெற்ற கதாய்ப் ஹிஸ்புல்லா அமைப்புதான் முக்கிய காரணம் என அமெரிக்கா சந்தேகித்திருந்தது. இதனால் ஆத்திரம் அடைந்த அமெரிக்கா சிரியாவில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.
கடந்த வாரம் ஈரான் மற்றும் சிரியாவில் உள்ள ஆயுதக்குழுக்களை குறிவைத்து 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன்தொடர்ச்சியாக இந்த தாக்குதலையும் நடத்தியுள்ளது. தீவிரவாதிகளை ஒடுக்கும் வகையில் ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா முகாம்களை அமைத்து இராணுவ வீரர்களை அமர்த்தியுள்ளது.
இதேவேளை ஜோர்தான் தாக்குதலுக்குப் பிறகு, ஈராக் அரசுக்கு ஏற்படும் அசௌகரியத்தை தடுக்க, அமெரிக்க நிலைகள் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தப்படும் எனவும் மற்ற இடங்களில் இந்த தாக்குதல் தொடரும் என ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri