உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தம்
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான சட்டமூலம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டின் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்களை இரத்து செய்து புதிய வேட்புமனுக்களை கோரும் வகையில் குறித்த சட்டமூலம் மாற்றியமைக்கப்படவுள்ளது.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் உத்தரவுக்கமைய வெளியிடப்பட்டுள்ளது.
மீள செலுத்தப்படவுள்ள கட்டுப்பணம்
இதற்கமைய, 2023ஆம் ஆண்டு உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காகச் சமர்ப்பிக்கப்பட்ட வேட்புமனுக்கள் இரத்து செய்யப்படவுள்ளன.
அத்துடன், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் வேட்பாளர்கள் செலுத்திய கட்டுப்பணத்தை மீள செலுத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |