உள்ளூராட்சி மன்ற சட்டங்களில் திருத்தம்! அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள திருத்தங்கள்
உள்ளூராட்சி மன்ற சட்டங்கள் திருத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள முன்மொழிவுகள்
உள்ளூராட்சி மன்ற சட்டத் திருத்தம் குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இது குறித்த முன்மொழிவுகள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதனை உள்ளூராட்சி மன்ற அமைச்சு உறுதி செய்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக இந்த முன்மொழிவுகள் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரியொருவர் ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அடுத்த கட்ட பணிகள்
அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப் பெற்றதன் பின்னர் சட்ட வரைவு திணைக்களம் அடுத்த கட்ட பணிகளை முன்னெடுக்கும் என தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் உள்ளிட்ட சில விடயங்களில் திருத்தங்களைச் செய்வது குறித்து யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

Super Singer: பாடிக் கொண்டிருக்கும் போதே நடுவர்கள் கொடுத்த சர்ப்ரைஸ்! ஃபைனலிஸ்ட்டாக சென்றவர் யார்? Manithan
