நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம்! வெளியான தகவல்
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,“நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் குறித்து அண்மைக்காலமாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்தே அந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றம்
இலங்கையில் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் வரையறுக்கப்படவில்லை. இதன் காரணமாக அவ்வாறான வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்குவதற்கு தெளிவான மற்றும் சீரான நடைமுறை எதுவும் இல்லை. மேலும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமையின் வரம்புகளை அடையாளம் காண்பது கடினமாக அமைத்துள்ளது.
சட்டத்தில் மீள் பரிசீலனை
எனவே, அண்மைக்காலமாக கடுமையாக விமர்சிக்கப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்குகளை பரிசீலிக்கும் போது இந்த சட்டத்தை மீள் பரிசீலனை செய்வது பொருத்தமானது”என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.