நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தில் திருத்தம்
நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு
அக்டோபர் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நாணய, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவுக்கான கட்டணம் 4,000 ரூபாவில் இருந்து 4,600 ரூபாவாகவும், பொது வரையறுக்கப்பட்ட நிறுவன பதிவுக்கான கட்டணம் 20,000 ரூபாவில் இருந்து 23,000 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
பதிவு கட்டணங்கள் அதிகரிப்பு
அதேநேரத்தில், நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து பதிவு கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, சங்கப் பதிவுக் கட்டணங்களும் திருத்தப்பட்டு, 3,000 ரூபாவாக இருந்த சங்கப் பதிவுக் கட்டணம், 3,450 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.








அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோர் விவகாரம்... சில நாடுகளின் விசா அனுமதியை ரத்து செய்யவிருக்கும் பிரித்தானியா News Lankasri

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

காதலியை கைவிட்ட நாஞ்சில் விஜயன்- குழந்தைக்காக செய்தாரா? வெளிச்சத்திற்கு கொண்டு வந்த திருநங்கை Manithan
