மருதங்கேணி வைத்தியசாலை வளாகத்தில் விபத்து!இருவர் காயம்
யாழ்.வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை வளாகத்தில் துவிச்சக்கர வண்டியுடன் நோயாளி காவு வண்டி மோதி விபத்து ஒன்று இடம் பெற்றுள்ளது.
குறித்த சம்பவமானது நேற்றையதினம்(10) பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மருதங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு தாய் ஒருவருடன் அவரது நான்கு வயதுடைய மகனும் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலை வாயில் பகுதியில் இருந்து துவிச்சக்கர வண்டியில் உட் பகுதிக்கு செல்ல முயன்றுள்ளனர்.
விபத்து
இதன்போது, மருத்துவமனையின் நோயாளர் காவு வண்டி பின் பக்கம் நோக்கி வருகை தந்ததை அவதானித்த பெண் தனது துவிச்சக்கர வண்டியின் வேகத்தை கட்டுப்படுத்தி நிறுத்த முயன்ற போது பின் பக்கமாக வந்ததுகொண்டிருந்த நோயாளி காவு வண்டி துவிச்சக்கர வண்டியை மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தின் போது காயமடைந்த நான்கு வயது சிறுவனும், தாயாரும் சிகிச்சையின் பின் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
Neeya Naana: மனைவியின் எதிர்பார்ப்பால் பேச முடியாமல் நின்ற கோபிநாத்... பரிதாப நிலையில் கணவர் Manithan