தங்கப் பவுணின் விலையில் மீண்டும் சடுதியான மாற்றம்
கொழும்பு செட்டியார்தெரு நிலவரப்படி 22 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 300,600 ரூபாவாக பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு காரணமாக, இலங்கையில் மீண்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வருகின்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்றைய நிலவரம்
இந்த நிலையில் கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய (11) தங்க விற்பனை நிலவரப்படி, 24 கரட் தங்க பவுணொன்றின் விலை 325,000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.
அதேநேரம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 300,600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த கிழமைக்கான நிலவரம்
கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பு செட்டியார்தெரு தகவல்களின் படி 22 கரட் தங்கப்பவுணின் விலை 293,200 ரூபாவாகவும், 24 கரட் தங்கப்பவுணின் விலை 317,000 ரூபாவாகவும் இருந்துள்ளது.
இந்த தகவல்படி கடந்த செவ்வாய்க்கிழமையை விட இன்றைய தினம் தங்கத்தின் விலையானது சுமார் எட்டாயிரம் ரூபா வரையில் அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூர்யா நிலைமையை பயன்படுத்தி சுந்தரவல்லி போட்ட கிரிமினல் பிளான், நந்தினி அதிரடி... மூன்று முடிச்சு புரொமோ Cineulagam
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan