பொய்யான தகவல்களை பரப்பும் அம்பிட்டிய தேரர்: கால்நடை பண்ணையாளர்கள் குற்றச்சாட்டு
மயிலத்தமடு பகுதியில் புத்தர் சிலையை வைத்துவிட்டு சிங்கள மக்கள் மத்தியில் அவர்களை விரட்டுவதாக பொய்யான தகவல்களை அம்பிட்டிய சுமனரத்ன தேரர் பரப்பி வருவதாக மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் தலைவர் சி.நிமலன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் உள்ள சில அரசியல்வாதிகளின் அடிவருடிகள் பண்ணையாளர்கள் தொடர்பாக பிழையான கருத்துகளை முகப்புத்தகங்கள் ஊடாக தெரிவித்துவருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தொடரும் போராட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு - மாதவனை காணியினை வேறு மாவட்டங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தவர்கள் அபகரிப்பதற்கு எதிராக சித்தாண்டியில் 41வது நாளாகவும் பண்ணையாளர்கள் போராடி வருகின்றனர்.
பண்ணையாளர்கள் இன்றைய தினமும் தமது போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் அத்துமீறிய பயிர்ச்செய்கையாளர்கள் அப்புறப்படுத்தப்படும் வரையில் போராட்டம் தொடரும் என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிங்கள மக்கள்
மத்தியில் திவிலபொத்தானையில் சிங்களவர்களை விரட்டுவதாக பொய்யான தகவல்களை
அம்பிட்டிய சுமனரத்ன தேரரும் அவருடன் இணைந்தவர்களும் பரப்பிவருவதாக
மயிலத்தமடு - மாதவனை கால்நடை பண்ணையாளர்களின் தலைவர் சி.நிமலன் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெயில் மற்றும் மழைக்கு மத்தியில் தமது மேய்ச்சல்
தரை காணியை வலியுறுத்தி போராட்டம் முன்னெடுத்துவரும் கால்நடை பண்ணையாளர்களின்
போராட்டத்திற்கு ஆதரவாக பல்வேறு தரப்பினரும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இன்றைய போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் ஆதரவு வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
[FPLITAA ]





பதினாறாவது மே பதினெட்டு 23 மணி நேரம் முன்

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan
