மூன்று நாடுகளின் தூதுவர்கள் யாழிற்கு விஜயம்
சுவிட்சர்லாந்து, ஜப்பான், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் இலங்கைக்கான தூதுவர்கள் யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.
சுவிட்சர்லாந்தின் தூதுவர் சிறி வால்ட், ஜப்பான் தூதுவர் ஹிடேகி மிசுகோஷி மற்றும் தென்னாபிரிக்காவின் உயர் ஸ்தானிகர் சடைல் ஷால்க் ஆகியோர் இன்று(14) பலாலியில் அமைந்துள்ள யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு சென்று கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
வெளிநாட்டு தூதுவர்கள்
இதன்போது யாழ்.மாவட்ட பாதுகாப்புப்படைத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சியுடன் வெளிநாட்டு தூதுவர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த சந்திப்பின் போது, இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாக அறியமுடிகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |