யாழில் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்ட இந்திய துணைத் தூதுவர்
யாழில் (Jaffna) இடம்பெற்ற இப்தார் நோன்புதிறக்கும் நிகழ்வில் யாழ்ப்பாண இந்திய துணை த்தூதகத்தின் துணைத் தூதுவர் ஸ்ரீ.சாய்முரளி (Sai Murali) கலந்து கொண்டுள்ளார்.
குறித்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நேற்று (02.04.2024) முஸ்ஸிம் கல்லூரி வீதியில் அமைந்துள்ள ஸலாமி யா மதரஸா மண்டபத்தில் மெலளவி பி.எ.ஏஸ்.சுபியான் தலைமையில் நடைபெற்றுள்ளது.
இப்தார் நோன்பு நிகழ்வு
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக யாழ்ப்பாண இந்திய துணைத் தூதகத்தின் துணைத் தூதுவர் ஸ்ரீ.சாய்முரளி கலந்து சிறப்பித்துள்ளார்.

இதன்போது யாழ்ப்பாண மாவட்ட சர்வமதக்குழுக்களின் இப்தார் நோன்பு திறப்புக்கு நிகழ்வுக்கான நல்லாசி உரைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து மாலை 06.23 மணியளவில் குரான் துவாங்கு ஓதப்பட்டதுடன் இப்தார் நோன்புதிறப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.

மக்கள் பணிமனையின் நேசக்கரங்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இஸ்லாமியர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், மதத்தலைவர்கள், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |













எம்பாப்பேவின் பெனால்டி கோலால் தப்பிப் பிழைத்த பிரான்ஸ்: கடைசி வரை பயம் காட்டிய பராகுவே News Lankasri
125 நாட்கள் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட கமேனியின் உடல்! ஆச்சரியப்படுத்தும் எம்பாமிங் பின்னணி என்ன? Manithan