கியூபாவுக்கான புதிய தூதுவர் டில்வின் சில்வாவை சந்தித்து கலந்துரையாடல்
கியூபாவுக்கான புதிய தூதுவரான திருமதி பட்ட்ரிசியா பெகோ குவேரா (Patricia Pego Guerra) இன்று (03.02.2026) பெலவத்தையிலுள்ள மக்கள் விடுதலை முன்னணி தலைமையகத்தில் அதன் பொதுச் செயலாளர் டில்வின் சில்வாவை சந்தித்துள்ளார்.
ஈரானுக்கு எதிராக போராட தயங்கும் ஸ்டார்மர்.. ட்ரம்பின் சீற்றத்தால் பிரித்தானியாவுடன் ஏற்படும் முறுகல்
நட்புறவு மேலும் வலுப்படுத்தப்படும்
இச்சந்திப்பில் இலங்கை மற்றும் கியூபாவுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது மற்றும் கியூபா கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கிடையிலான நீண்டகால நட்புறவை தொடர்ந்து முன்னெடுப்பது குறித்து கலந்துரையாடப்பட்டது.
மேலும், குறிப்பாக சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் பேரிடர் மேலாண்மை துறைகளில் இலங்கையுடன் இணைந்து செயல்படும் திறன் குறித்து கியூப தூதுவர் அறிவித்தார்.
இரு நாடுகளுக்கிடையில் பண்பாட்டு ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் கவனம் செலுத்தப்பட்டது. அத்துடன், இலங்கையில் மக்கள் விடுதலை முன்னணி தங்களின் கொள்கை கொண்ட வெற்றிக்கு கியூப தூதவர் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.