தென்னிலங்கையில் பதற்றம்! மூவர் வெட்டிக்கொலை
அம்பலாந்தோட்டை, மாமடல பகுதியில் இடம்பெற்ற மோதலில் மூன்று பேர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (2) இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
வெட்டிக் கொலை
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், 6 பேர் கொண்ட குழு வீடொன்றிற்கு நுழைந்து அங்கிருந்த மூன்று பேரை வெட்டிக் கொன்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று (02) இரவு 07.30 மணியளவில் இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர்கள் 29, 34 மற்றும் 45 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஏனைய இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடையே நீண்டகாலமாக நிலவி வந்த தகராறின் விளைவாக இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |