அம்பலாந்தோட்டை துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி
அம்பலாந்தோட்டை, கொக்கல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (19.07.2023) அதிகாலை வடக்கு கத்வார, கொக்கல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள வருகை தந்த மூன்று பேர் கொண்ட குழுவில் ஒருவர் வீடொன்றுக்குள் நுளைந்து வீட்டின் உரிமையாளரை சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் தெரிவிக்கையில்,
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொள்ள மூவர் வருகை தந்ததுடன், அதில் ஒருவர் ஜன்னல் வழியாக வீட்டின் அறையொன்றிற்குள் சென்றுள்ளார்.
இந்நிலையில் குறித்த அறையில், சிறுமி ஒருவர் கல்வியில் ஈடுபட்டு கொண்டிருந்தவேளையில், உள் நுழைந்தவரை கண்டு கூச்சலிட்டுள்ளார்.
இதன்போது வீட்டின் உரிமையாளர் பின்வாசல் வழியாக சென்று பரிசோதித்தபோது, குறித்த நபரை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாந்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |