அமரகீர்த்தி கொலை: மேலும் ஒருவர் கைது! இதுவரை 32 பேர் சிக்கினர்
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொலனறுவை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் இன்று தெரிவித்துள்ளது.
இதுவரை 32 பேர் கைது

கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும், அவரை அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவின் கொலைச் சம்பவம் தொடர்பில்
இதுவரை 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு
அறிவித்துள்ளது.
இருக்கும் பிரச்சனையில் பழைய வில்லன் என்ட்ரி, நந்தினி, ரேணுகா எப்படி சமாளிக்க போகிறார்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam