அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் பழைய மாணவர் சங்க நிர்வாக தெரிவு
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலைக்கான பழைய மாணவர் சங்கத்தின் நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வானது, இன்று காலை 9:30 மணியளவில் பாடசாலை மண்டபத்தில் பாடசாலை அதிபர் கண்ணதாசன் தலமையில் இடம்பெற்றுள்ளது.
இறைவணக்த்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில், வரவேற்புரை, தலைமை உரையைத் தொடர்ந்து பழைய மாணவர் சங்கத்தின் கடந்த கூட்ட அறிக்கை, கணக்கறிக்கை என்பன வாசிக்கப்பட்டுள்ளன.
புதிய நிர்வாகத் தெரிவு
அதனைத் தொடர்ந்து, பாடசாலையில் மேற்கொள்ளப்பட வேண்டிய பல்வேறு பணிகள் தொடர்பாக ஆராயப்பட்டதன் பின்னர் புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றுள்ளது.
இதில், தலைவராக சம்பிரதாயபூர்வமாக பாடசாலை அதிபர் கண்ணதாசன், செயலாளராக பா.விஜிதா, பொருளாளராக தி.றஜி, உபதலைவராக இரா.செந்தூரன், உப செயலாளராக ச.கபில்ராம் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |