நாட்டில் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நாட்டில் மாற்றுக் கருத்துக்கள் நசுக்கப்படும் நிலை உருவாகியுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாண மேயர் மணிவண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மணிவண்ணன் தமது கட்சியின் முன்னாள் உறுப்பினர் எனவும் அவரை பாதுகாக்க வேண்டிய தேவையில்லை என்ற போதிலும் இந்த நாட்டில் தற்பொழுது மாற்றுக் கருத்துக்களுக்கு இடமில்லாத நிலை உருவாகியுள்ளது.
அரசாங்கம் ஓரு புறத்தில் இராணுவ மயாக்கமலை மேற்கொள்ளும் அதேவேளை, மறுபுறத்தில் இனவாதத்தை உருவாக்கி வருகிறது.
மாநகரசபையின் பாதுகாப்புப் பணியாளர்களது சீருடை இளநீலமாகவோ, கறுநீலமாகவே இருப்பதனால் அவர் புலிகளை மீள உருவாக்க முயற்சிப்பதாக குற்றம் சுமத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
அரசாங்கம் நாட்டில் பாசிசத்தை உருவாக்கி வருவதாகவும் இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமெனவும், இதனைப் பொறுப்புடன் கூறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
“கடவுளே இந்த நாட்டின் நிலைமையைப் பாருங்கள், தினேஸ் குணவர்தன போன்ற சிரேஷ்ட அரசியல்வாதிகளே இவ்வாறான ஓர் நிலைமை இருக்கக் கூடாது” என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது உரையில் கூறியுள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 9 மணி நேரம் முன்

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
