பிரித்தானியாவில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 5000 பவுண்டு கொடுப்பனவு
பிரித்தானியாவில் புதிய திட்டம் ஒன்று அமுலுக்கு வரவுள்ள நிலையில் மக்களை ஊக்குவிப்பதற்காக 5000 பவுண்டுகள் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய ஒவ்வொரு வீட்டிலும் வெப்ப குழாய்களை பயன்படுத்துவதற்காக குடும்பத்துக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
பிரித்தானியாவில் வீடுகளில் இருந்து வெளியேறும் கார்பன் உமிழ்வைக் குறைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வெப்ப குழாய்களுக்கு மாற திட்டமிட்பட்டுள்ளது.
மக்கள் இந்த திட்டத்திற்கு மாறுவதற்காகவும் இந்த திட்டத்தை ஊக்குவிப்பதற்காகவும் ஒவ்வொரு வீடுகளுக்கு தலா 5000 பவுண்டுகள் மானியம் வழங்க இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் எரிவாயு கொதிக்கலன்களை மாற்றி, அதற்கு பதிலாக குறைந்த கார்பன் உமிழ்வை கொண்ட வெப்பப் குழாய்களை பொருத்தி பயன்படுத்த ஒவ்வொரு குடும்பத்தினரும் இந்த மானியத்திற்காக விண்ணப்பிக்க முடியும்.
2035ஆம் ஆண்டுக்குள் அனைத்து இடங்களில் புதிய தொழில்நுட்பம் கொண்ட வெப்ப அமைப்புகளை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதற்கு பிரித்தானியா திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட குறைந்த கார்பன் இலக்கை அடையமுடியும் என்பதற்காக அரசாங்கம் இந்த மானியங்களை அறிவித்தது. இதற்காக 450 மில்லியன் பவுண்டுகள் மதிப்பில் கொதிகலன் மேம்படுத்தல் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்முலம், வரும் ஆண்டுகளில் கார்பன் உமிழ்வு குறையும் என பிரித்தானிய அதிகாரிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் எரிவாயுவில் உலகளாவிய விலை உயர்வுக்கு வெளிப்பாடு குறையும் என்று பிரித்தானிய அமைச்சர்கள் தெரிவித்தனர்.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திட்டத்தினை தங்கள் வீடுகளில் அமுல்படுத்தும் மக்கள் அதற்காக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.