நீதியே எமக்கு தேவை நிதி கோரி நாம் போராடவில்லை: வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி கடும் கண்டனம்
நீதியே எமக்கு தேவை நிதி கோரி நாம் போராடவில்லை எனவும் நிதி எமக்கு தேவையில்லை எனவும் நீதியே வேண்டும் என யாழ். வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்க தலைவி சிவபாதம் இளங்கோதை தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று(14) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.
நிதி ஒதுக்கீடு
இங்கு கருத்து தெரிவித்த அவர், பாதுகாப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்ட உறவுகளுக்காகவே நாங்கள் 14 வருடங்களாக நீதி கேட்கின்றோம்.
எங்களுக்கு அரசாங்கம் ஒதுக்குகின்ற பணம் தேவையில்லை நீதியே வேண்டும்.காணாமல்போன ஆக்களுக்கு ஒதுக்கிய பணத்தை தென்னிலங்கையைச் சேர்ந்த கடத்தப்பட்டவர்களுக்கு வழங்குங்கள் என கூறியுள்ளார்.
முல்லைத்தீவு
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக, நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் ஜனாதிபதியால் ஒதுக்கப்பட்ட கோடிக்கணக்கான பணத்தைப் பெறுவதற்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தின் முல்லைத்தீவு தலைவியான மரியசுரேஷ் ஈஸ்வரி மறுப்பு தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று(14) ஜனாதிபதியின் அறிக்கைக்கு பதிலளித்த போதே அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 21 மணி நேரம் முன்

ட்ரம்பிற்கு கெட்ட செய்தி... அமெரிக்காவின் சக்திவாய்ந்த வெடிகுண்டுக்கு எதிரி நாடு ஒன்றால் சிக்கல் News Lankasri
