கிண்ணியா பிரதான வீதி அகலப்படுத்தல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - பிரதி அமைச்சர்

Trincomalee Sri Lanka Development Arun Hemachandra Budget 2026
By Kiyas Shafe Oct 04, 2026 06:58 AM GMT
Report

கிண்ணியா பிரதான வீதியை அகலப்படுத்துவதற்கும் கிண்ணியா ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வதற்கும் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்துள்ளார்.

கிண்ணியா பிரதான வீதியை அகலப்படுத்துவதற்கான முன்மொழிவு வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் ஏற்கனவே அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கான ஆரம்பகட்ட முன் ஆயத்தப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிண்ணியாவில் நேற்றைய தினம் (03.10.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

முன்மொழிவு சமர்ப்பிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், கிண்ணியா பிரதான வீதியை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கு எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் என நம்புகின்றோம். இதற்கான முன்மொழிவு ஏற்கனவே வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனைத்து பணிகளையும் வீதி அபிவிருத்தி அதிகார சபை முன்னெடுத்து வருகின்றது.

உத்தியோகபூர்வ அனுமதி கிடைத்த பின்னர் 2027ஆம் ஆண்டில் வீதி அபிவிருத்திப் பணிகளை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இதன் மூலம் கிண்ணியா மக்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என நம்புகின்றோம். கிண்ணியா ஆதார வைத்தியசாலையைப் பொறுத்தவரையில், அதன் எதிர்கால அபிவிருத்தி தொடர்பில் ஆராய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பது பலரினதும் எதிர்பார்ப்பாக உள்ளது. குழுவின் அறிக்கையின் அடிப்படையில் வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவது தொடர்பில் தீர்மானிக்கப்படும். அதேவேளை, அவ்வாறு மத்திய அரசின் கீழ் கொண்டு வரப்படாவிட்டாலும், தற்போதுள்ள வைத்தியசாலையின் தரத்தை உயர்த்தி, அதற்குத் தேவையான அத்தியாவசிய வசதிகளை ஏற்படுத்துவதற்காக எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் நிதி ஒதுக்கப்படும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

கிண்ணியா பிரதான வீதி அகலப்படுத்தல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - பிரதி அமைச்சர் | Allocate Funds For Kinniya Base Hospital

மாகாணங்களிடமிருந்து மத்திய அரசாங்கம் பொறுப்பேற்கும் விடயங்கள் வரையறுக்கப்பட்டவையாகவே உள்ளன. இருந்தபோதிலும், கிண்ணியா வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், அது மத்திய அரசின் கீழ் வருகின்றதா இல்லையா என்பதைவிட, வைத்தியசாலையின் சேவைகள் துரிதப்படுத்தப்பட்டு மக்களுக்கு சிறந்த சுகாதார சேவை கிடைக்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும் என்றார். திருகோணமலை மாவட்டம் பல்வேறு பிரச்சினைகளைக் கொண்ட மாவட்டமாகும்.

அவற்றில் காணிப் பிரச்சினை முக்கியமானதாக காணப்படுகிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் காணிப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு, படிப்படியாக தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவுக்கு இணையாக உப குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

காணிப்பிரச்சினைக்கான தீர்வு

இதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் நிலவும் காணிப் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவில் காணப்படும் காணிப் பிரச்சினைகள், கிண்ணியா மற்றும் சம்பூர் பகுதிகளிலுள்ள காணிப் பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சம்பூர் மக்களின் காணிப் பிரச்சினைகள், கந்தளாய் சீனித் தொழிற்சாலையுடன் தொடர்புடைய காணிப் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகின்றது.

கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் பல நூற்றுக்கணக்கான குடும்பங்களுக்கு காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன. குறுகிய காலப்பகுதியில் அதிகளவான காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கிய சாதனையையும் அரசாங்கம் நிலைநாட்டியுள்ளது. திருகோணமலை துறைமுகம் நாட்டின் முக்கிய கேந்திர நிலையங்களில் ஒன்றாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டு வருட ஆட்சிக் காலத்தில் திருகோணமலை துறைமுகத்திற்கு வருகை தரும் கப்பல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

கிண்ணியா பிரதான வீதி அகலப்படுத்தல் மற்றும் வைத்தியசாலை அபிவிருத்திக்கு அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் நிதி - பிரதி அமைச்சர் | Allocate Funds For Kinniya Base Hospital

இது குறுகிய காலத்தில் அரசாங்கம் பெற்றுள்ள முக்கியமான வெற்றிகளில் ஒன்றாகும் எனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தின் அபிவிருத்திக்காக பல கோடி ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளதாகவும், இதில் பிரதேச, கட்சி அல்லது இன ரீதியான எந்தவிதமான பாரபட்சமும் காட்டப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். கடந்த ஆட்சிக் காலத்தில் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதைவிட, மக்களுக்கு காட்சிப்படுத்துவதற்காக பெயர்ப்பலகைகள் மற்றும் நினைவுக்கற்கள் அமைப்பதற்கே முக்கியத்துவம் வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஆனால், தற்போதைய அரசாங்கம் எந்தவொரு பெயர்ப்பலகையையோ, நினைவுக்கல்லையோ அமைத்து தனிநபர்களின் பெயர்களைப் பொறிக்காமல் மக்கள் நலனுக்கான அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்தார். இது மக்கள் ஆணையினால் உருவாக்கப்பட்ட அரசாங்கம். அரசியல்வாதிகளுக்காக அல்ல, மக்களுக்காகவே சேவையாற்றி வருகின்றோம்.

இன்னும் சில வாரங்களில் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் முன்வைக்கப்படவுள்ளது. அதில் கிண்ணியா பிரதான வீதியை அகலப்படுத்தும் வேலைத்திட்டத்திற்கும், கிண்ணியா ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்திக்கும் நிச்சயமாக நிதி வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும் பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மேலும் தெரிவித்தார்.

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது! நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

தலைமறைவாகியிருந்த ஞானசார தேரர் கைது! நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல்

இலங்கை கடற்பரப்பில் குவிந்துள்ள ஈரானிய கப்பல்கள்! இலங்கைக்கு மறைமுகமாக காத்திருக்கும் பாரிய சிக்கல்

மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், கொழும்பு

02 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US