புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வருவதாக குற்றச்சாட்டு
புதிதாக தனிமைப்படுத்தப்பட்ட சில இடங்களில் பொதுமக்கள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறையின் பேச்சாளர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.
சில இடங்களில் பொதுமக்கள் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு மறுப்பு வெளியிடுகின்றனர்.சிலர் மக்கள் நடமாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை மதிக்க மறுப்பதாகவும் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் குறித்த மீறல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதார அதிகாரிகளுக்கு அதிகாரம் இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஏற்கனவே அளுத்கமை மற்றும் பண்டாரகம பகுதியில் சில பொது மக்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த ஒக்டோபர் 30 முதல் இன்று வரை கொரோனா ஒழுங்கு விதிகளை மீறியமைக்காக 1700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri