உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய தடை உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
எதிர்வரும் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு புதிய தடை உருவாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குற்றம் சுமத்தியுள்ளது.
இதன் பின்னணியின் பாரிய சதி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதன்படி நிதி வழங்கப்படாவிட்டால் வாக்குச் சீட்டுகள் அச்சிடப்படமாட்டாது என அரச அச்சகம் தெரிவித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று (13.02.2023) தெரிவித்துள்ளது.
தேர்தலுக்கான நிதி பற்றாக்குறை
எனினும் இந்த தகவல் தொடர்பில் அரச அச்சகத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை காரணமாக தேர்தலுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அரச அதிகாரிகள் தொடர்ந்து கூறிவரும் நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் தடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
இதேவேளை எதிர்வரும் 23ஆம் திகதி தேர்தல் நடத்துவது தொடர்பாக
உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri
