இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை! - அமைச்சர் ரம்புக்வெல
மனித உரிமைகளை மீறியதாக இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கு ஆற்றல் இருப்பதாகவும், இது குறித்து உரிய நேரத்தில் பதில் வழங்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமைச்சரவை பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் இராணுவம் தொடர்பில் அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு அப்போதிருந்த எமது அரசாங்கத்தின் நிலைபாடு மிகவும் தெளிவாக முன்வைக்கப்பட்டது.
எமக்கிடையில் பல உடன்பாடுகள் ஏற்பட்டன. இறுதியாக 2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மாற்றமடைந்தது அப்போதைய வெளிவிவகார அமைச்சரினால் 30/1 என்ற ஆலோசனைக்கு அமைய இணைய அனுசரணையுடன் நாம் தவறு செய்ததாக பிரேரணை சமர்பிக்கப்பட்டது.
அதன் பெறுபேரையே நாம் அனுபவிக்கின்றோம். அப்போதைய நிர்வாகத்தில் இருந்த அமைச்சர் திலக் மாரப்பன தமது உரையில் இந்த ஆலோசனை நாட்டின் அரசியல் அமைப்புக்கு முறண்பட்டது என்று கூறினார்.
அதே போன்று மீண்டும் தெரிவான எமது அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தனவினால் உத்தியோக பூர்வமாக தெரிவிக்கப்பட்டது.
இதிலிருந்து விலகுவது சரியானது என்பதை விரிவாக தெரிவிக்க எதிர்பார்ப்பதாகவும் இதுதொடர்பில் விரிவான வகையில் விடயங்களை சமர்பிக்க முடியும் என்றும் அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான யோசனையை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் அடிப்படை அற்றவை என்றும், ஒன்றுக்கொன்று முரணானவை என்றும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனையை திருத்தி அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அவர் கூறினார்.
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
70வது Filmfare விருதுகள்: விக்ரம். கார்த்தி முதல் சாய் பல்லவி, சிவகார்த்திகேயன் வரை விருதுகளை வென்ற பிரபலங்களின் பட்டியல் இதோ Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri