கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்ட கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டுவருவதாக கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நே.விமல்ராஜ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மட்டு.ஊடக அமையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், எனக்கு 2023 ஆம் ஆண்டு முதன்முதலாக கிழக்கு பல்கலைக்கழகத்திலே பேரவை உறுப்பினர் பதவி கிடைக்கப்பெற்றது.
பேரவை உறுப்பினர் என்பது கிழக்கு பல்கலைக்கழகத்திலே அபிவிருத்தி, நியமனங்கள், குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வு வழங்குதல், அபிவிருத்தி நடவடிக்கைகளை எவ்வாறு முன்கொண்டு செல்லுதல், ஒட்டுமொத்தமாக அந்த யுனிவர்சிட்டியின் செயல்பாடுகளையும் கவனிக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற, அனுமதியளிக்கின்ற ஒரு உயரிய சபை.
பல்வேறு குற்றச்சாட்டுக்கள்..
இந்த சபையின் பிரதான நோக்கம் இலங்கையிலே அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்ற சட்டங்கள், நடைமுறையிலுள்ள சட்டங்கள், சுற்றறிக்கைகள், விதிகள் இவை அனைத்தும் சரியாக நடக்கின்றதா என்பதை குறிப்பாக அவதானிப்பதுதான் இந்தப் பல்கலைக்கழகப் பேரவையின் நோக்கம்.

இது கலந்துரையாடல் மூலமே இவை அனைத்திற்கும் தீர்வுகள் வழங்கப்பட வேண்டும். அந்த அடிப்படையிலே உள்வாரியாகவும் வெளிவாரியாகவும் பேரவை உறுப்பினர்களை நியமிப்பார்கள்.
உள்வாரியாக நியமிக்கப்படுபவர்களை விட ஒன்று அதிகமாக நியமிப்பார்கள் வெளிவாரியாக ஏனெனில் வெளிவாரியானவர்கள் சரியான முடிவுகளைப் பல துறைப்பட்ட துறையிலேயும் இருப்பவர்கள் எடுக்க வேண்டும் என்பதற்காக அந்த அடிப்படையிலே 2023ஆம் ஆண்டு எனக்கு கிடைத்தபோது அன்றைய அரசாங்க அமைச்சர் மிகக் கடின பிரயத்தனங்களை மேற்கொண்டு இந்தப் பதவியை வரிதாக்குவதற்காக அன்றைய பிரதமர், அன்றைய ஜனாதிபதியிடம் மிகவும் பாரதூரமான நடவடிக்கைகள் எடுத்திருந்தார்.
இருந்தாலும் நான் என்னுடைய தொடர்ச்சியான முயற்சியின் காரணமாக தொடர்ந்து இந்தப் பல்கலைக்கழகத்திலே பணியாற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டேன், அவருடைய செயல்பாடு முறியடிக்கப்பட்டது" என குறிப்பிட்டுள்ளார்.
கேரளாவில் திருமண நிச்சயம் செய்த தமிழக நபர் மரணம்: சோகத்தில் உயிரை மாய்த்துக் கொண்ட இளம்பெண் News Lankasri