முன்னாள் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டு! ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கை கையளிப்பு
ஜப்பானிய நிறுவனமான தாய்பேயிடம் முன்னாள் அமைச்சர் இலஞ்சம் கோரியதாக, சமூக ஊடகங்கள் ஊடாக குற்றச்சாட்டுகள் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் கோரிக்கைக்கு அமைய நியமிக்கப்பட்ட மூவரடங்கிய விசாரணைக் குழுவின் அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.
மூவரடங்கிய விசாரணைக்குழு அறிக்கை சமர்ப்பிப்பு
ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவிடம் இன்று பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில், வைத்து இந்த அறிக்கை கையளிக்கப்பட்டுள்ளது.

விசாரணைக் குழுவின் தலைவி ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜனி வீரவர்தன ஜனாதிபதியின் செயலாளரிடம் அறிக்கையை கையளித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் 22ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் மூவரடங்கிய
இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது.
வெண்ணிலா சொன்ன விஷயத்தை கேட்டு கடும் ஷாக்கில் கண்மணி, என்ன முடிவு எடுப்பார்.. அன்புடன் கண்மணி புரொமோ Cineulagam
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் ஏற்பட்ட பிரிவு.. கடும் கோபத்தில் பாண்டியன்.. பரபரப்பான கட்டத்தில் சீரியல் Cineulagam