2011 உலகக் கிண்ணம் தொடர்பான குற்றச்சாட்டு தவறானது! விசாரணைகள் நிறுத்தம்
2011ம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இலங்கை அணியின் தோல்வி போட்டி நிர்ணயம் என முன்னாள் விளையாட்டு அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே ( Mahindananda Aluthgamage) கூறிய அறிக்கை ஆதாரமற்றது என்பதை சட்டமா அதிபர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி, அந்த அறிக்கையின் அடிப்படையில் சிறப்பு பொலிஸ் புலனாய்வு பிரிவு விசாரணைகளை முடித்துள்ளது.
குமார் சங்கக்கார (Kumar Sangakkara), மஹேல ஜயவர்த்தனே (Mahela Jayawardene), உபுல் தரங்கா (Upul Tharanga) மற்றும் அந்த அணியின் பல வீரர்களை பொலிஸார் விசாரித்தனர்.
அந்த அறிக்கையை உடனடியாக விசாரிக்குமாறு அப்போதைய விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த டல்லாஸ் அழகப்பெரும பொலிஸ் பிரிவுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
எனினும், மஹிந்தானந்த அளுத்கமகே போட்டி நிர்ணயம் செய்ததற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அப்போது கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேம் சேஞ்சர் ஓடாதுனு முன்பே தெரியும்.. மிகப்பெரிய நஷ்டம்: ஷங்கரை தாக்கிய தயாரிப்பாளர் தில் ராஜு Cineulagam

253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

அமெரிக்காவில் பிறந்தவர்களை நாடுகடத்துவதுதான் அடுத்த வேலை: அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் சூசகம் News Lankasri
