கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் கல்லூரியில் அதிபர் நியமனம் தொடர்பில் சதித்திட்டம் தீட்டப்படுவதாக குற்றச்சாட்டு

Social
By Independent Writer Feb 19, 2021 03:15 PM GMT
Report

கொழும்பிலுள்ள பிரபலமான ஆண்கள் கல்லூரியொன்றின் அதிபரை நீக்கி, ஜனாதிபதி ஆணைக்குழு ஊடாக ஓய்வுபெற்ற அதிபரை நியமிக்க சதித்திட்டம் தீட்டப்படுவதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கங்களில் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.

கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் பி.ஏ.அபேரத்ன தானாக முன்வந்து பதவி விலகுவதாக கூறி கல்வி செயலாளரிடமிருந்து ஒரு கடிதத்தை பெற்றுக்கொண்டுள்ளதாகவும், அதன் பின்னர் அவரே தனது இராஜினாமா கடிதத்தை மீளப் பெற்றுக்கொண்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனினும், கல்வி இராஜாங்க அமைச்சினால் அபேரத்னவுக்கு இடமாற்றக் கடிதம் வழங்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டார்லின், இது கடுமையான அரசியல் தலையீட்டின் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள, சட்டவிரோத செயல் என சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர், சட்டத்தரணி சாகர கரியவசம், அபேரத்னவை பதவியில் இருந்து அகற்றுவதில் நேரடியாக தலையீடு செய்துள்ளதாக நேற்றைய தினம் வெளியிட்ட ஊடக அறிக்கையில், இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சாகர காரியவசத்தின் தலையீட்டை ஊடக சந்திப்பில் வெளிப்படையாகவே விமர்சித்த முருத்தெட்டுவே ஆனந்த தேரர், அதிபர் அபேரத்னவிற்காக முன் நிற்பதாக குறிப்பிட்டுள்ளதாகவும், ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

சுமார் 8,000இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி கற்கும், இலங்கையின் மிகவும் பிரபலமான பாடசாலை அதிபர் குறித்த விடயத்தில் இத்தகைய அரசியல் தலையீடு காணப்படுவது, கல்வியில் கடுமையான சரிவுநிலையை காட்டுவதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. “பிரதான பாடசாலைகளில் இதுபோன்ற நிலை காணப்படுமாயின், மாகாண மட்ட பாடசாலைகளின் நிலைமை தொடர்பில் கருத்து வெளியிட வேண்டிய அவசியமில்லை.

அதிபருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் இருந்தால், முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும், அதனைவிடுத்து அழுத்தம் கொடுத்து அதிபரின் ஒப்புதலுடன் அவரை இடமாற்றுவதற்கு கல்விச் செயலாளர் முயற்சிப்பது, அரசியல் நோக்கத்தை நிறைவேற்றும் செயற்பாடாகும்.” இலங்கை கல்வி நிர்வாக சேவையின் முதற்தர அதிகாரிகளை இடமாற்றம் செய்வதில் இத்தகைய குறுக்கீடு ஏற்படுவது குறித்து விசேட கவனம் செலுத்த வேண்டும் எனவும் அத்தகைய தலையீட்டை நிறுத்த உடனடியாக தலையீடு வேண்டும் எனவும், இலங்கை ஆசிரியர் சங்கம், பொதுச் சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது சமுதாயத்தில் பரபரப்பான விவாதத்திற்கு உட்பட்டுள்ள முன்னாள் நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில், ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள அரசியல் பழிவாங்கல் குறித்த குழுவால் ரோயல் கல்லூரியின் அதிபர் பதவி தொடர்பாக அருவருப்பான பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

“இதுவரை பகிரங்கப்படுத்தப்படாத அரசியல் பழிவாங்கல் குறித்த குழுவின் அறிக்கையின் பக்கச்சார்பான பரிந்துரைகள் ஊடகங்களில் வெளியிடப்படுகின்றன. உதாரணமாக, ரோயல் கல்லூரியின் முன்னாள் அதிபர் உபாலி குணசேகர 55 வயதில் ஓய்வு பெற்றுள்ளார்.

எனினும் அரசியல் பழிவாங்கல் காரணமாக அவர் ஓய்வுபெற்றுள்ளதாக குறிப்பிட்டு, அவரை மீண்டும் பதவியில் அமர்த்தி மூன்று வருடங்கள் சேவையை பெற்றுக்கொள்ள பரிந்துரைப்பது நகைப்பிற்குரிய விடயமாகும்.

” முன்னாள் அதிபர் உபாலி குணசேகர மீது ஒழுக்க விசாரணை நடத்தப்படுகின்ற போதிலும், ஓய்வு பெற்ற பின்னர் ஒரு தனியார் பாடசாலையின் அதிபராக அவர் பணியாற்றி வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

கடந்த தேர்தலின் போது அவர் பல்வேறு அமைப்புகளை உருவாக்கி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியுள்ள இலங்கை ஆசிரியர் சங்கம், ரோயல் கல்லூரி அதிபர் பதவியில் அவரை மீண்டும் நியமனம் செய்வதற்கும், தற்போதைய அதிபரை பதவி நீக்குவதற்கும் இடையில் சூழ்ச்சி ஒன்று காணப்படுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறான சூழ்நிலையில், ரோயல் கல்லூரியின் அதிபர் பதவியை அரசியல்மயமாக்குவதானது, கல்வியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என ஆசிரியர் சங்கத்தின் தலைவர், ஜோசப் ஸ்டார்லின் மேலும் தெரிவித்துள்ளார்.

Gallery
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Worms, Germany

08 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, வவுனியா

09 Oct, 2014
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

தம்பாலை அச்சுவேலி, Markham, Canada

08 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, London, United Kingdom

01 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, கொழும்பு

08 Oct, 2018
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம்

09 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US