ஆறு வயது சிறுமியை தவறான முறைக்குட்படுத்திய குற்றச்சாட்டு: குதிரை கையாளுபவருக்கு பிணை
ஆறு வயது சிறுமி ஒருவரை தவறான முறைக்குட்படுத்திய வழக்கில் குதிரை கையாளுபவர் ஒருவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவில் ஆறு வயது சிறுமியை தகாத முறையில் தொட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குதிரை மற்றும் குதிரை கையாளுபவர் இன்று (29.10.2025) கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
முன்னதாக, பாதிக்கப்பட்டவரின் தந்தை கறுவாத்தோட்டம் பொலிஸாரில் அளித்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இந்த முறைப்பாட்டின்படி, ஒக்டோபர் 26ஆம் திகதி, குறித்த தந்தை தனது இரண்டு மகள்களுடன் பொழுதுபோக்கிற்காக விகாரமஹாதேவி பூங்காவிற்குச் சென்றிருந்தார்.
பிணைகளில் செல்ல அனுமதி
இந்நிலையில், மகள்மார் மாறி மாறி ஒரு குதிரையில் சவாரி செய்தனர். இறுதிச் சுற்றில், சந்தேகநபர் சிறுமிகளில் ஒருவரை தவறான முறையில் தொட்டதாகக் கூறப்படுகிறது.

சம்பவத்தைக் கண்ட தந்தை உடனடியாக தனது மகளை அழைத்துச் சென்று பொலிஸில் முறையிட்டுள்ளார். இதனையடுத்தே, பொலிஸார் சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினர்.
எனினும், சந்தேகநபரின் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் செய்யவில்லை என்றும், சவாரியின் போது சிறுமி குதிரையிலிருந்து விழுவதைத் தடுக்க மட்டுமே அவரை தொட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

முன்வைக்கப்பட்ட உண்மைகளைக் கருத்தில் கொண்ட நீதவான், சந்தேகநபரை தலா 200,000 ரூபாய் மதிப்புள்ள இரண்டு பிணைகளில் செல்ல அனுமதித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |