தமிழக சட்டமன்ற தேர்தலில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு
தமிழக சட்டமன்ற தேர்தல் இடம்பெற்று வரும் நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதி ஆழ்வார்பேட்டை புனித பிரான்சிஸ் பள்ளி அமைக்கப்பட்டுள்ள 13ஆவது வாக்குச்சாவடியில் அந்த தொகுதி வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் முன்னிலையில் பாஜக- திமுகவினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று(23) காலை 7 மணிக்கு தொடங்கியது.
விறுவிறுப்பாக நடைபெற்றுவரும் தமிழக சட்டமன்ற தேர்தல்! வாக்களித்த மறுநொடியில் தவெக தலைவர் விஜய் எழுதிய கடிதம்
மோதல்
வாக்காளர்கள் தங்களது பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமை ஆற்றி வருகின்றனர்.
அடையாள அட்டை இல்லாமல் கள்ள ஓட்டு போடுவதாக தமிழிசை குற்றம்சாட்டினார்.
இதற்கு திமுக முகவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதனையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸார் அவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியதை அடுத்து அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
வாக்குச்சாவடிக்குள் இருந்த சந்தேக நபரை பொலிஸார் வெளியேற்றாத நிலையில் துணை ராணுவத்தினர் வெளியேற்றினர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
அந்த கடையை கொண்டுபோய் சுடுகாடு பக்கத்துல வைங்க.. CM விஜய்க்கு நடிகர் பார்த்திபன் கொடுத்த ஐடியா Cineulagam
ஈரானுக்கு மரண அடி உறுதி... பாலிஸ்டிக் ஏவுகணைத் தாக்குதலுக்குப் பிறகு கொந்தளித்த இஸ்ரேல் News Lankasri