கொழும்பில் பதற்றம்: பல்கலை மாணவர்கள் பொலிஸார் மீது கல்வீச்சு தாக்குதல் (Live)
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று (07.06.2023) முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப்புகை, நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவா் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆா்ப்பாட்ட பேரணியை கலைப்பதற்காக ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் இந்த நீா்த்தாரை மற்றும் கண்ணீா்ப்புகை பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸார் மீது பல்கலைக்கழக மாணவர்கள் கல்வீச்சு தாக்குதல்களை நடத்தி வருவதுடன், பொலிஸார் மாணவர்களை விரட்டி தாக்கி வருகின்றனர்.
இந்த ஆா்ப்பாட்ட பேரணி காரணமாக விஜயராம சந்தியில் இருந்து ஸ்ரீ ஜயவா்தனபுர பல்கலைக்கழகம் வரையான வீதி மூடப்பட்டுள்ளது.
கடந்த 5 மாதங்களாக மூடப்பட்டுள்ள பௌத்த - பாலி பல்கலைக்கழகம் உடனடியாக திறக்கப்பட வேண்டும், மாணவர் சங்கங்கள் மீதான தடையை உடனடியாக நீக்க வேண்டும், 1995/37 சட்டத்தை மாற்றி பௌத்த - பாலி பல்கலைக்கழகத்தை பட்டத்தினை விற்கும் வியாபார நிலையமாக மாற்றும் அரசாங்கத்தின் சதியை முறியடிப்போம் என ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
