சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டம் முன்னெடுப்பு (Video)
மட்டக்களப்பு - காந்தி பூங்கா முன்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குக் கண்டனம் தெரிவித்தும் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டங்களுக்கு வலு சேர்க்கும் வகையிலும் சகல தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 12.30 மணியளவில் காந்தி பூங்கா முன்பாக ஒன்று கூடிய அனைத்து தொழிற்சங்கத்தினரும் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை முன் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது காலிமுகத்திடலில் நடைபெறும் போராட்டத்துக்கு வலு சேர்ப்பதாக இந்த போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கத்துக்கு எதிரான பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கை தேசம் நான்கு பக்கத்திலும் நாசமாய்ப் போய் கிடக்கின்றது. இந்த ஆட்சியாளர்களுக்கு இந்த அரசைக் கொண்டு நடத்தத் திராணியற்று போயுள்ள காரணத்தினால் உடனடியாக பதவி விலக வேண்டும்.
மக்களுடைய கோரிக்கைகளுக்குச் செவி சாய்த்து ஒரு சுபிட்சமான இலங்கையைக் கட்டியெழுப்ப இடமளிக்க வேண்டும்'' என கூறியுள்ளனர்.
இந்த போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒன்றிணைந்த வங்கி ஊழியர்
சங்கம், பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் சங்கம், மின்சாரசபை ஊழியர் சங்கம், தபால்
திணைக்கள ஊழியர் சங்கம் உட்பட பல்வேறு சங்கங்கள் இணைந்திருந்தன.










அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri

15 வயதுக்கு கீழ் உள்ள பிள்ளைகள் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை: பிரான்ஸ் ஆணையம் பரிந்துரை News Lankasri
