பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும்
பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்ட காலத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
இன்று இரவு 11 மணி முதல் எதிர்வரும் 17ம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரையில் இந்த பயணக்கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் காலப்பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் மட்டும் மருந்துகளை விநியோகம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்கள் தொடர்பிலான நடைமுறை எதிர்வரும் 17ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் இன்று இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரையில் நாடு முழுவதிலும் பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதனால் இந்த தேசிய அடையாள அட்டை இறுதி இலக்க நடைமுறை அமுல்படுத்தப்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் யாருக்கு வெற்றி..! யாருக்கு தோல்வி 15 மணி நேரம் முன்

மணிமேகலையை தாக்கி தான் ரக்ஷன் இப்படி பேசினாரா.. குக் வித் கோமாளி 6ல் என்ன கூறினார் பாருங்க Cineulagam

இஸ்ரேல் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: ஏர் இந்தியா, பல விமான நிறுவனங்கள் சேவை நிறுத்தம் News Lankasri
