பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் தீர்மானம் வெளியானது
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவு வகுப்புகளையும் எதிர்வரும் 25ஆம் திகதி மீளத் திறக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் செயலாளர் பெரேரா கபில பெரேரா இதனை அறிவித்துள்ளார்.
அதற்கமைய, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பப் பிரவு வகுப்புகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
கோவிட் பரவல் காரணமாக சுமார் 06 மாதங்கள் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தன. ஏனைய வகுப்புகளை ஆரம்பிப்பது தொடர்பான திகதிகள் பின்னர் அறிவிக்கப்படும் அதேவேளை, கோவிட் பரவலுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதற்கு சகல தரப்பினரினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.
இதேவேளை, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் முன்வைக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டலுக்கமைய 4 கட்டங்களின் கீழ் பாடசாலைகளை திறக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வல்லரசுகளின் மோதல்களுக்கு மத்தியில் இந்து சமுத்திரத்தைப் பாதுகாக்க இணக்கப்பாடு: புதுடில்லியில் உயர்மட்டப் பேச்சு
வெற்றி பெற்ற பிறகு போர்களில் சேரும் நபர்கள் எங்களுக்குத் தேவையில்லை! பிரித்தானிய பிரதமருக்கு ட்ரம்பின் பதிவு
போரின் தொடக்கத்தை அறிவித்த அதே தொப்பியுடன்.. உயிரிழந்த 6 அமெரிக்க படை வீரர்களுக்கு மரியாதை செலுத்திய ட்ரம்ப்