மீண்டும் மூடப்படும் பாடசாலைகள்! கல்வி அமைச்சு சற்று முன்னர் அறிவிப்பு
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் அடுத்த வாரமும் விடுமுறை வழங்கப்படுகின்றது.
விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
ஏனைய கிராமப்புற பாடசாலைகள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
| செவ்வாய் முதல் நிறுத்தப்படும் சேவைகள்! வெளியானது அறிவிப்பு |
முந்தைய அறிவிப்பு

எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை. எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
| பெட்ரோல் இல்லை! வரிசையில் காத்திருப்பதால் பயனில்லை : வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது |
அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
சில பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, வலய கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள குறித்த பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரம் வழங்கியிருந்தது.

பாடசாலை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும் சில மாணவர்களுக்கு பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாவிட்டால் அவர்களுக்கு இணையவழி ஊடாக கற்பித்தல் செயற்பாடுகளை முன்னெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கல்வி அறிவுறுத்தி இருந்தது.
இந்த நிலையில், குறித்த காலப்பகுதியில் அவதானிக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்ததுடன், நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையையும் கருத்தில் கொண்டு எதிர்வரும் வாரமும் அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 15 மணி நேரம் முன்
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam