சர்வகட்சி அரசாங்கம் எப்போது உருவாக்கப்படும் ஜனாதிபதி அறிவிப்பு
சர்வகட்சி அரசாங்கம் எப்பொழுது உருவாக்கப்படும் என்பது பற்றிய தகவல்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வெளியிட்டுள்ளார்.
22ம் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதன் பின்னர் அனைத்து கட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்காக அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வகட்சி அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு தாம் நடவடிக்கை எடுக்க உள்ளதாக ஜனாதிபதியாக பதவி ஏற்ற போது ரணில் விக்ரமசிங்க கூறியிருந்தார்.
உத்தேச 22ம் திருத்தச் சட்டம் எதிர்வரும் 27ம் திகதி நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
22ம் திருத்தச் சட்டம் குறித்து நாடாளுமன்றில் முதலாம் வாசிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்தால் (உச்ச நீதிமன்றில் சவால் விடுக்கப்படாத சந்தர்ப்பத்தில்) ஏழு நாட்களின் பின்னர் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்களை நடாத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உத்தேச திருத்தச் சட்டத்தை நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் இன்றைய பரிதாப நிலை - நெஞ்சை உருக வைக்கும் சம்பவம் |