மக்கள் போராட்டத்திற்கு இடையில் சர்வக்கட்சி அரசாங்கத்திற்காக குழுக்களை நியமித்துள்ள ஐ.மக்கள் சக்தி
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைக்கும் ஆரம்ப கட்ட நடவடிக்கையாக எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்து வழிநடத்தல் குழுக்களை நியமித்துள்ளார்.
வழிநடத்தல் குழு

இதனடிப்படையில், இந்த வழிநடத்தல் குழுவின் ஒருங்கிணைப்பாளராக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்லவை நியமிக்குமாறு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் குறுகிய மற்றும் நீண்டகால இலக்கை அடையும் வேலைத்திட்டத்தை முன்வைப்பதற்காக எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய பொருளாதார மற்றும் அரசியல் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தலைமையில் பொருளாதார குழுவும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தலைமையில் அரசியல் குழுவும் இயங்கும் என நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை சகல எதிர்க்கட்சிகளுக்கும் முன்வைத்து, அந்த கட்சித் தலைவர்களின் அனுமதியை பெற்ற பின்னர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் முன்வைக்கப்படும்.
மக்களின் கஷ்டங்களுக்கு முடிவு காணும் வகையில் உடனடியான நிவாரணங்கள்

இதன் பின்னர் சர்வக்கட்சி அரசாங்கத்தை அமைப்பதற்காக பெரும்பான்மை பலத்தை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் மிக கஷ்டங்களுக்கு முடிவு காணும் வகையில் உணவு, கமத்தொழில், எரிபொருள்,மின் சக்தி, கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியவசிய சேவைகளுக்கு துரிதமான நிவாரணங்களையும் தீர்வுகளையும் வழங்குவது இந்த வழிநடத்தல் குழுக்களின் பிரதான நோக்கமாக உள்ளது ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
100 வருட பழமையான வீட்டில் மறைந்திருந்த பணக் குவியல்- அதிர்ச்சியடைந்த பிரித்தானிய தம்பதி News Lankasri