சர்வகட்சி அரசாங்கம் குறித்து விரைவில் தீர்மானிக்கப்படும் – ஐக்கிய மக்கள் சக்தி
சர்வகட்சி அரசாங்கம் தொடர்பில் விரைவில் தீர்மானிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதனை ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் ஜனாதிபதியினால் சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அழைப்பு தமக்கு கிடைக்கப்பெற்றது என அவர் தெரிவித்துள்ளார்.

விரைவில் அறிவிக்கப்படும் தீர்மானங்கள்
இந்த அழைப்பு தொடர்பில் கட்சி என்ற ரீதியில் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அழைப்பினை நிராகரிக்கப்போவதில்லை எனவும் எந்த அடிப்படையில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாக ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார் என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வயது உண்மை தெரிந்ததும் சரவணன் எடுத்த அதிரடி முடிவு, கதறி புலம்பும் மயிலு... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Bigg Boss: மேடையிலேயே வாந்தி எடுத்து மாஸ் காட்டிய விஜய் சேதுபதி! அடுக்கி வைத்துள்ள ரெட் கார்டு Manithan
கனியை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய அந்த ’ஸ்டார்’ நடிகர்.. அட என்னப்பா நடக்குது Cineulagam