அரசாங்கத்தில் இணையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்!சஜித் மறுப்பு
தமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இணையவுள்ளதாக வெளியான தகவலை ஐக்கிய மக்கள் சக்தி மறுத்துள்ளது.
அத்துடன் தமது கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அதன் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் இணைந்திருப்பதாக அந்த கட்சி குறிப்பிட்டுள்ளது.
கட்சித் தலைவரின் முடிவை யாரும் மீற மாட்டார்கள் மற்றும் ஒருதலைப்பட்சமாக அரசாங்கத்தில் இணைய மாட்டார்கள் என்றும் எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரப்பூர்வ அறிக்கையில் இன்று தெரிவித்துள்ளது.
ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியிலிருந்து அகற்ற நடவடிக்கை
இந்த நிலையில், கட்சியின் எதிர்காலம் தொடர்பாக கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது சொந்த முடிவை எடுக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முடிவு செய்துள்ளனர் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சகல கட்சிகளும் ஒன்றிணைந்து சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று சனிக்கிழமை தெரிவித்த கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, இது நகைச்சுவையாக மாறியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
'மிஸ்டர் விக்ரமசிங்க மிஸ்டர் பீன் வேடத்தில் நடிக்கிறார் என்றும் அவர்
கூறியுள்ளார்.
இலங்கை மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால் ரணில் விக்ரமசிங்கவை ஆட்சியில் இருந்து
அகற்ற முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 20 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam