சிறந்த நோக்கத்திற்காக அனைவரும் ஒன்றிணைய வேண்டும்:ஜனாதிபதி
போராட்டத்தின் ஊடான மக்களின் உண்மையான எதிர்பார்பை வெற்றியடைய செய்ய வேண்டுமாயின் அதில் உள்ள தவறானவற்றை கைவிட்டு, சிறந்த நோக்கத்துடன் அனைரும் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வகட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பது தொடர்பிலான யோசனை குறித்து தென்னிலங்கையின் பிரதான சங்க நாயக்கர் கலாநிதி ஒமல்பே சோபித தேரர் உட்பட மக்கள் சபையினருடன் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில், ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.
அரசியல் கட்சிகள் மற்றும் பல அணிகளுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி உட்பட சில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியுள்ளது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
வேலைத்திட்டங்களில் மக்களை சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும்
இதன் போது கருத்து வெளியிட்டுள் கலாநிதி ஓமல்பே சோபித தேரர், முன்னெடுத்துச் செல்லும் வேலைத்திட்டங்களில் பொது மக்களை சம்பந்தப்படுத்திக்கொள்ள வேண்டும்.
சர்வகட்சிகள் அடங்கிய ஸ்திரத்தன்மைக்காக நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ள அமைதியான வேலைத்திட்டத்துடன் இணைய தயாராக இருக்கின்றோம்.
சட்டவிரோத, அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான மற்றும் முரட்டுத்தனமான பயங்கரவாத செயல்களை எந்த காலத்திலும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மக்களுக்கு செய்வதற்கு எதுவும் இல்லாத காரணத்தினாலேயே அமைதியான மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது எனவும் கூறியுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கவை தற்காலிகமாக கூட ஜனாதிபதியாக பதவியில் அமரவிடக் கூடாது என ஓமல்பே சோபித தேரர், கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
