தீவிரமடையும் ஈரான் போர்! ஈரான் தேசியத் தொலைக்காட்சி ஹேக் செய்யப்பட்டதால் பரபரப்பு
ஈரானில் நடைபெற்ற அரசுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, அந்நாட்டு அரசுத் தொலைக்காட்சியின் செயற்கைக்கோள் ஒளிபரப்புகள் ஹேக்கர்களால் இடைமறிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதில், நாட்டைவிட்டு வெளியேறியுள்ள முன்னாள் அரச குடும்பத்தைச் சேர்ந்த கிரீடதாரி இளவரசர் ரேசா பஹ்லவி ஆதரவு காணொளிகள் ஒளிபரப்பப்பட்டதாக கூறப்படுகிறது.
ஹேக் செய்யப்பட்ட தொலைக்காட்சி
அந்த காணொளிகளில், பாதுகாப்புப் படையினர் பொதுமக்களை நோக்கி ஆயுதம் திருப்ப வேண்டாம் எனவும், மக்களின் பக்கம் சேர வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
சில பாதுகாப்புப் படையினர் ஆயுதங்களை கீழே வைத்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
BREAKING: Iran's state TV hacked — Crown Prince Reza Pahlavi is now on air! pic.twitter.com/Obp6G4yKua
— Neo (@Realneo101) January 18, 2026
இளவரசர் ரெசா பஹ்லவி, "நீங்கள் ஈரானின் தேசிய ராணுவம், இந்த இஸ்லாமியக் குடியரசின் ராணுவம் அல்ல. போராட்டக்காரர்களுக்கு எதிராகத் துப்பாக்கிகளை நீட்டாதீர்கள், அவர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்" என்று ஈரான் ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுக்கும் வீடியோ தேசிய தொலைக்காட்சியில் ஹேக்கர்களால் ஒளிபரப்பப்பட்டது.
ஈரான் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், அந்நாட்டின் மிக உயரிய பாதுகாப்பு கொண்ட தேசியத் தொலைக்காட்சியே ஹேக் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் – அமெரிக்கா பதற்றம்
இதனிடையே, ஈரானில் போராட்டங்களை அடக்க அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறைந்தது 3,941 ஆக உயர்ந்துள்ளதாக மனித உரிமை செயற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இணைய சேவை முடக்கப்பட்டுள்ளதால், உண்மையான எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பின்னணியில், சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்ற ஈரான் வெளிவிவகார அமைச்சர் அபாஸ் அரக்சிக்கு வழங்கப்பட்ட அழைப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஈரானுடன் பதற்றம் நீடிக்கும் சூழலில், அமெரிக்காவின் USS Abraham Lincoln விமானத் தாங்கி கப்பல் மத்திய கிழக்கு நோக்கி பயணித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஈரான் – அமெரிக்கா இடையிலான பதற்றம் மேலும் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.
கனடா, கிரீன்லாந்தை இணைத்து ட்ரம்ப் வெளியிட்ட புதிய அமெரிக்க வரைபடம் - உலகளவில் சர்ச்சை News Lankasri