நாடாளுமன்றில் விரையமாகும் மின்சாரம்!
நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து விளக்குகள் மற்றும் குளிரூட்டல்களும் இன்று செயற்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டதைத் தொடர்ந்து கவலைகள் எழுந்தன.
நாடாளுமன்றத்தில் இன்று சகல மின்விளக்குகள் மற்றும் குளிரூட்டிகள் செயற்படுத்தப்பட்டமை தொடர்பில் நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
பொதுமக்கள் தியாகம் செய்ய வலியுறுத்தப்படும் இந்த நேரத்தில் நாடாளுமன்றம் முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இந்த விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாக சியம்பலாபிட்டிய நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
எரிசக்தி நெருக்கடியை அடுத்து நாட்டிற்கு உதவுவதற்காக இந்த வளாகத்திற்குள் கூடுதல் விளக்குகளை அணைக்க வேண்டும் என்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இந்த வாரம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.