கல்வியில் கை வைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்! அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சி எச்சரிக்கை
கல்வியில் கை வைத்தால் ஆசிரியர்கள் என்ன செய்வார்கள் என விளங்கிக்கொள்ளாத அரசாங்கம் ஒன்றை செய்ய முன்னர் அதன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும் என அகில இலங்கை மக்கள் எழுச்சி கட்சியின் தலைவர் அருள் ஜெயந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் .ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
உங்களிடம் ஆட்சி இருக்கிறது. இராணும் பொலிஸ் இருக்கிறது விரும்பியதை செய்யலாம் என்று நினைக்காதீர்கள். கல்வியை சீர்குலைப்பது என்பது அரசு செய்யும் பெரும் தவறே என்று சொல்ல வேண்டியுள்ளது. இவ்வளவு பிரச்சினை வரும் என்று முன்னுக்கே தெரிய வேண்டும்.
ஆண் இராணுவம், பொலிஸைப் பயன்படுத்தி பெண் என்று கூடப் பார்க்காமல் பிடித்து சட்டை கிளிய வாகனத்தில் ஏற்றுவதற்கு இவர்களுக்கு யார் அதிகாரம் வழங்கியது. உலகத்தில் எங்கேயும் நடந்ததில்லை ஐனநாயக நாட்டில் இப்படி அதிகாரம் இல்லை.
மேலும் விவசாயிகள் தமது உற்பத்திக்கு இரசாயன பசளைகளை பயன்படுத்துவதை தடை செய்வது சரி ஆனால் அதை நடைமுறைப்படுத்தும் பொறிமுறை தவறானது.
முதல் அவர்கள் உற்பத்திக்கு தயாராக வேண்டிய காலம் இருப்பதை அரசாங்கம் அறிய வேண்டும். காலம் காலமாக விவசாயிகள் இரசாயனப் பசளையைப் பயன்படுத்தி விவசாய உற்பத்திகளை மேற்கொண்டு வந்தனர்.
இயற்கைப் பசளைகளை பயன்படுத்தி விவசாயம் செய்வது சிறந்தது தான் ஆனால் திடீரென இந்த நடைமுறை அறிவிப்பு ஆனது விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தவுள்ளது என்பதனை அறிந்து அதற்கேற்ப செயற்பட வேண்டும்.
ஒரு காலப்பகுதியை வழங்க வேண்டும். அதிகாரத்தில் உள்ளவர்களின் செயற்பாடு விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.நாளை என்ன நடக்கும் என்றால் விவசாயத்தை செய்யாமல் விடுவார்கள். சரியான முறையில் சரிப்படுத்தி செய்ய வேண்டும் என்று அரசாங்கத்தை வேண்டுகிறோம் என்றார்.
சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
கிரீன்லாந்து விவகாரம்: 10% கூடுதல் வரி..! டிரம்பின் மிரட்டலுக்கு ஸ்டார்மர் கடும் எதிர்ப்பு News Lankasri
நிலாவுக்கு விவாகரத்து தரும் சோழன்.. அதிர்ச்சியில் நிலா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போவது Cineulagam