அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார்

Jaffna Climate Change Northern Province of Sri Lanka Weather
By Kajinthan Nov 28, 2024 04:51 AM GMT
Report

பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு சமைத்த உணவுகளை வழங்குமாறு பிரதேச செயலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார்

அத்தோடு, நண்பர்கள் மற்றும் உறவினர்களது வீடுகளில் தங்கி இருக்கின்ற சந்தர்ப்பத்தில் அவர்கள் தங்களால் சமையலை செய்ய முடியாது என்று பிரதேச செயலர்கள் ஊடாக உறுதிப்படுத்துகின்ற பட்சத்தில் அவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது பெய்துவரும் அடைமழை காரணமாக பாதிக்கப்படுகின்ற மக்களை, உயர்தர பரீட்சை நடக்கின்ற பாடசாலைகளை தவிர ஏனைய பாடசாலைகளில் தங்க வைப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.பல தொண்டு நிறுவனங்களும் தனி நபர்களும் எங்களைத் தொடர்பு கொண்டு உதவி செய்வதற்கு முன் வந்திருக்கின்றார்கள்.

நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்

நீர் நிரம்பிய வடிகாலில் தவறி விழுந்து உயிரிழந்த நபர்

உணவுப்பொருட்கள்

அந்த வகையில் அந்தந்த பிரதேச செயலகங்களில் ஒருமுறை ஏற்படுத்தப்பட்டு அங்கு ஒரு பொறுப்பான பதவி நிலை உத்தியோகத்தரின் தலைமையிலே, வழங்கப்படுகின்ற உணவுப்பொருட்களை அல்லது வேறு பொருட்களை சேமித்து வைத்து தேவையின் அடிப்படையில் பொதுமக்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.கிடைக்கப்பெறுகின்ற பொருட்கள் என்னென்ன பிரதேச செயலர்கள் மாவட்ட செயலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்ற நடைமுறை காணப்படுகின்றது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார் | All Arrangements Are Ready For Disaster Victims

அத்துடன் மேற்படி பொருட்களை மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற கரும பீடத்திலும் வழங்க முடியும். இவ்வாறு வழங்கப்படுகின்ற பொருட்கள் பிரதேச செயலகங்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் வழங்கப்படும். பின்னர் அது தேவை என் அடிப்படையில் மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும்.

பாதுகாப்பு நிலையங்களுக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்பட்டால் மக்கள் தயக்கம் இன்றி அங்கு செல்ல முடியும். உங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்கு பிரதேச செயலகங்களில் உள்ள உத்தியோகத்தர்கள் தயாராக உள்ளார்கள்.

யாழ்ப்பாண மாநகர சபை, பிரதேச சபை, வடிகால் அமைப்பு சபை ஆகியோர் வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எதிர்வரும் காலங்களில் தொற்றுநோய் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் இருக்கின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வரையறுக்கும் உத்தேச சட்டம் சமர்ப்பிப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகளை வரையறுக்கும் உத்தேச சட்டம் சமர்ப்பிப்பு

தொலைபேசி இலங்கங்கள்

ஆகையால் நாங்கள் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு, மக்களுடைய சுகாதாரம் சார்ந்த பாதுகாப்பு பொறிமுறையையும் சரியான முறையில் முன்னெடுக்க வேண்டிய தேவைப்பாடு இருக்கின்றது.

அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டோருக்கு சகல ஏற்பாடுகளும் தயார் | All Arrangements Are Ready For Disaster Victims

தற்போதைய தரவுகளின் அடிப்படையில் கடல் மட்டம் சற்று உயர்வடைந்து இருக்கின்ற காரணத்தினால் நிலப்பரப்பிலிருந்து கடலை நோக்கி செல்கின்ற வெள்ளத்தின் அளவு குறைவடைத்து அல்லது இல்லாத இருக்கின்றது. எனவே பொதுமக்கள் உங்களது பாதுகாப்பினை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

இதுவரையான தரவுகளின் அடிப்படையில் 12970 குடும்பங்களைச் சேர்ந்த 43682 பேர் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று வீடுகள் முழுமையாக சேததமடைந்துள்ளன. 129 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. 66 பாதுகாப்பு நிலையங்களில் 1634 குடும்பங்களைச் சேர்ந்த 5793பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்தங்கள் ஏற்பட்டால் பொதுமக்கள் 24 மணி நேரமும் 117 அல்லது 0773957894 அல்லது 0212221676 அல்லது 0212117117 என்ற தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு பாதுகாப்பினை உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் என்றார். 

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

வெள்ளம் காரணமாக விவசாய நிலங்கள் பாதிப்பு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US