மகிந்த விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள பின்னணியில் அநுர வெளியிட்ட அறிவிப்பு
நாட்டின் ஜனாதிபதியோ அல்லது கிராம உத்தியோகத்தரோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு கீழே இருக்க வேண்டும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் அதிகாரம் இருந்தால், அரசியல் அதிகாரத்துடன் தொடர்பு இருந்தால், பணம் இருந்தால், செல்வாக்கு இருந்தால் அவர்கள் மீதான சட்ட அமுலாக்கம் நடைபெறாத ஓர் கலாசாரம் கடந்த காலங்களில் காணப்பட்டது என ஜனாதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.
அந்த நிலையை மாற்றி அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசு அதிகாரிகள் முன்னிலையில் உரையாற்றிய போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகி
குற்றச் செயல் ஒன்று தொடர்பிலான விசாரணைகளின் போது ஒருவரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வது அல்லது சாட்சியம் பெற்றுக் கொள்வது பாரதூரமான குற்றம் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் எந்த பதவி வகித்தாலும் எவ்வாறான செல்வாக்குகள் கொண்டிருந்தாலும் சட்டத்தின் முன் சமமானவர் என ஜனாதிபதி சுட்டிக்காட்டி உள்ளார்.

ஏதேனும் ஒரு சம்பவம் தொடர்பில் தமது பெயர் தொடர்பு பட்டியிருந்தால் தம்மிடம் விசாரணை நடத்துவதில் எவ்வித தவறும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல் அதிகாரம் கொண்டவர்களிடம் விசாரணையை நடத்துவது மாபெரும் குற்றம் என்னும் ஓர் நிலைப்பாட்டை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அனைவரும் சட்டத்திற்கு கீழே இருக்க வேண்டும் எனவும் சட்டத்திற்கு அமையவே செயல்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராபஜக்ச விசாரணைக்காக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ள நிலையில் ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கபில சந்திரசேனவின் இறுதி சத்தியகடதாசி - மகிந்த, நாமலை சிக்கவைக்க சதித்திட்டம்
YOU MAY LIKE THIS VIDEO
சேது-ஐஸ்வர்யா நிச்சயதார்த்தத்தில் நடந்த பரபரப்பு சம்பவம், தமிழ் செய்யப்போவது என்ன?- சின்ன மருமகள் சீரியல் Cineulagam
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam