பலவீனமடையும் முஸ்லீம் காங்கிரஸ்: ரணிலுக்கு வலுக்கும் ஆதரவு
முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க ஒன்றிணைந்துள்ளார்.
கொழும்பு பிளவர் வீதியிலுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் சற்று முன்னர் விஜயம் செய்த அவர், ஜனாதிபதியைச் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதி செய்வதற்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகத் கூறியுள்ளார்.
முஸ்லிம் காங்கிரஸ்
அவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினராக நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.
மேலும், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம மற்றும் ஏ.எச்.எம். பௌசி ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |