அனைவரினதும் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்! அலி சப்ரி
அனைத்து இன சமூகங்களினதும் உரிமைகளை உறுதி செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
உயர்மட்ட சிறுபான்மை சமூக கூட்டம்
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்திற்கு சமாந்தரமாக நடைபெறும் உயர்மட்ட சிறுபான்மை சமூக கூட்டமொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் இந்த கூட்டம் நடைபெற்று வருகின்றதாக தெரியவருகிறது.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், அரசியல் அமைப்பின் பிரகாரம் சிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படுகிறது.
அரசாங்கத்தின் முனைப்பு
இன சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தையும் நம்பிக்கையையும் கட்டியெழுப்ப அரசாங்கம் முனைப்பு காட்டி வருகிறது.
இனங்களுக்கு இடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு மட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத குரோத செயற்பாடுகளை மேற்கொள்வோருக்கு எதிராக எவ்வித நெகிழ்வுத் தன்மையும் காட்டப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
1983 ஜூலை இனப்படுகொலையை வரலாற்று இன உணர்வோடு காவிச் செல்வோம்... 12 மணி நேரம் முன்
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
லட்சக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் செய்தி: பிரித்தானிய பிரதமரின் திட்டம் News Lankasri