இனப்பிரச்சினைக்கு தீர்வு காண செயற்குழு : அலி சப்ரி
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக இலங்கையில் முன்மொழியப்பட்ட உண்மை மற்றும் நல்லிணக்கப் பொறிமுறையின் வழிமுறைகளை வகுக்க தென்னாபிரிக்காவுடன் இணைந்து இலங்கை செயற்குழு ஒன்றை அமைக்கும் என வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் விஜயதாச ராஜபக்சவுடன் இணைந்து மார்ச் 21 மற்றும் 25 ஆம் திகதி வரை அவர் தென்னாபிரிக்க பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
அதன் அடிப்படையில் இலங்கைக்கு தொழில்நுட்ப உதவிகளை வழங்க தென்னாபிரிக்க அதிகாரிகள் முன்வந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1948 முதல் 1994 வரை தென்னாபிரிக்காவில் நிலவிய, நிறவெறி முடிவுக்குப் பிறகு அந்த நாட்டில், இன சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை உபகுழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவை
உண்மையைக் கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதும் இந்த திசையில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளில் அடங்கும் என இலங்கை முன்னதாக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு தெரிவித்திருந்தது.
அந்த வகையில் தென்னாபிரிக்கத் தலைவர்கள் இத்தகைய பொறிமுறையின் ஊடாக நல்லிணக்கத்திற்கான ஏற்படுத்தும் அணுகுமுறைகளை பகிர்ந்து கொண்டதாக அமைச்சர் சப்ரி கூறியுள்ளார்.
இதன் அடிப்படையில் தென்னாபிரிக்க அனுபவத்தின் அடிப்படையில் இலங்கையில் பொறிமுறையை அமைப்பதற்கு ஒரு செயற்குழு நியமிக்கப்படும்.
இதற்காக இலங்கையின் அரசியலமைப்பு விதிகளுக்கு அமைய புரிந்துணர்வு ஒப்பந்தம்
செய்துக்கொள்ளப்படும் என்றும் சப்ரி தெரிவித்துள்ளார்.

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
